தியாகதுருகம் ஒன்றியக்குழு கூட்டம்
தியாகதுருகம் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
தியாகதுருகம்,
தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில் முருகன், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சி வேலு வரவேற்றார். கூட்டத்தில் தியாகதுருகம் ஒன்றியத்தில் அரசு பள்ளிகளில் கட்டப்படும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் சமையலறை கட்டிடங்கள் ஆகியவற்றின் கட்டுமான பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும், நிர்வாக செலவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்து போன சித்தாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகத்திற்காகவும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தயாபரன், வீரமணி, மருத்துவர் மணிகண்டன், ஒன்றிய பொறியாளர் இளந்தென்றல், பணி மேற்பார்வையாளர் சந்திரசேகர், உதவி வேளாண்மை அலுவலர் அன்பழகன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.