கடையின் மேற்கூரையை பிரித்து செல்போன்கள், பணம் திருட்டு


கடையின் மேற்கூரையை பிரித்து செல்போன்கள், பணம் திருட்டு
x
திருப்பூர்


காங்கயம் அருகே கடையின் மேற்கூரையை பிரித்து 15 செல்போன்கள், மற்றும் ரூ.30 ஆயிரம் திருடப்பட்டத. இது ெதாடர்பாக மர்ம ஆசாமியை போலீசார் தேடிவருகிறார்கள்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

செல்போன் கடை

காங்கயம் முத்தூரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 37). இவர் காங்கயம், திருப்பூர் சாலை, படியூரில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

பின்னர் நேற்று காலை கடையை திறந்தபோது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கியுள்ளது தெரியவந்தது.

ெசல்போன்கள், பணம் திருட்டு

அத்துடன் மர்ம நபர்கள் கடையில் இருந்த 15 செல்போன்கள் மற்றும் ெராக்கம் ரூ.30 ஆயிரத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து காங்கயம் போலீஸ் நிலையத்தில் பாஸ்கர் புகார் அளித்தார்.

அதன்பேரில் காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். படியூர் பகுதியில் மேற்கூரையை பிரித்து செல்போன் கடையில் செல்போன் மற்றும் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story