நிதி நிறுவன அதிபர் வீட்டில் 8 பவுன் நகை திருட்டு


நிதி நிறுவன அதிபர் வீட்டில் 8 பவுன் நகை திருட்டு
x
திருப்பூர்


திருப்பூர் 15வேலம்பாளையம் சொர்ணபுரி லே அவுட் பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார். நிதி நிறுவன அதிபர். இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது மேஜையில் வைத்திருந்த 8 பவுன் நகையை காணவில்லை.

இதுகுறித்து 15வேலம்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து விசாரணை நடத்தினார்கள். அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம ஆசாமி ஒருவர் வீட்டுக்குள் புகுந்து நகையை திருடியது தெரியவந்தது. முன்பக்க கதவு உடைக்கப்படவில்லை. இதனால் கதவை பூட்டாமல் விட்டு விட்டதால் மர்ம ஆசாமி வீடு புகுந்து நகையை திருடியதாக போலீசார் தெரிவித்தனர். நகையை திருடிச்சென்ற ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story