வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு


வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
x
திருப்பூர்


பொங்கலூர் அருகே உள்ள நல்லகாளி பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 45). விவசாயி. இவர் நேற்று காலை 8 மணியளவில் கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்ததில் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் நகை திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து அவர் அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தார்.

மேலும் கொடுவாய் பகுதியை சேர்ந்தவர் கோமதி (50). இவர் தனது சொந்த ஊரான திண்டுக்கல் சென்று சில நாட்கள் தங்குவது வழக்கம். அந்த வகையில் கடந்த மாதம் 20-ம் தேதி திண்டுக்கல் சென்றுள்ளார். பின்னர் நேற்று காலை கொடுவாய் வந்து வீட்டில் பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்ததில் வீட்டில் வைத்திருந்த 7 பவுன் தாலிக்கொடி, ரூ.28 ஆயிரம் மற்றும் எல். ஈ.டி டி.வி. ஆகியவை திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து கோமதி அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். இந்த 2புகார்களின் அடிப்படையில் அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து


Next Story