தில்லைநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


தில்லைநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

அகரம்சீகூர் கிராமத்தில் தில்லைநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா மங்களமேட்டை அடுத்துள்ள அகரம்சீகூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற தில்லைநாயகி அம்மன் கோவில் உள்ளது. இங்கு இருசி அம்மன், திலகவதி அம்மன், கருப்பு அம்பலத்து அம்மன், குழியரசி அம்மன், விநாயகர், முருகன் ஆகிய பரிவார தெய்வங்கள் உள்ளன. இந்த கோவிலின் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் விநாயகர் பூஜை, கணபதி ஹோமம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு அனுக்ஞை, எஜமானர் சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், கலச பூஜை, யாகசாலை பிரவேசம் நடைபெற்றது.

நேற்று காலை 6 மணியளவில் கலச பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இதையடுத்து வேத விற்பன்னர்கள் மந்திரங்களை முழங்க காலை 9 மணியளவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அகரம்சீகூர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.


Next Story