திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு


திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு
x

திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு

தாளவாடி

திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திம்பம் மலைப்பாதை

பண்ணாரி அருகே திம்பம் மலைப்பாதை உள்ளது. ஈரோடு மாவட்டம் வழியாக கர்நாடகா செல்வதற்கு இது முக்கிய பாதையாகும். அதனால் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கும், இங்கிருந்து கர்நாடகாவுக்கும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. அதிக பாரமின்றி வரும் வாகனங்கள் இந்த கொண்டை ஊசி வளைவுகளை கடந்துவிடுகின்றன. ஆனால் அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் வளைவுகளில் திரும்ப முடியாமல் நின்று விடுகின்றன. அல்லது பழுதாகிவிடுகின்றன. அதனால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு என்பது அன்றாடம் நடக்கும் நிகழ்வாகிவிட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இந்தநிலையில் கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு ஒரு கன்டெய்னர் லாரி சென்றுகொண்டு இருந்தது. நேற்று காலை 7 மணி அளவில் அந்த லாாி திம்பம் மலைப்பாதையின் 9-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றது. அப்போது திரும்ப முடியாமல் லாரி அப்படியே நின்றுவிட்டது. இதனால் மலைப்பாதையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து காலை 8 மணி அளவில் வேறு ஒரு வாகனத்தின் டிரைவர் லாவகமாக கன்டெய்னர் லாரியை வளைவில் இருந்து திருப்பினார். இதனால் 1 மணி போக்குவரத்துக்கு பிறகு வாகனங்கள் செல்லத்தொடங்கின.


Next Story