திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா


திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
x

திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.

தஞ்சாவூர்

கபிஸ்தலம் அருகே ஆதனூர் கிராமத்தில் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து பூச்சொரிதல் நிகழ்ச்சி, அம்மன் வீதிஉலா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழாவை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தீக்குண்டம் முன்பு எழுந்தருளினார். அப்போது விரதமிருந்து காப்பு கட்டி கொண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை தரிசனம் செய்தனர். திரவுபதி அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


Next Story