திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா


திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
x

திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.

தஞ்சாவூர்

சுவாமிமலை அருகே உள்ள தேவனாஞ்சேரியில் தர்மராஜா, திரவுபதியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் தீ மிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தீ மிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கர்ணன் பிறப்பு, தருமர் பிறப்பு, கிருஷ்ணன் அவதாரம், அம்மன் பிறப்பு, வில் வளைப்பு, அம்மன் வீதி உலா, பாஞ்சாலி சபதம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. இதையடுத்து 20 நாட்கள் விரதம் இருந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


Next Story