திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா


திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 22 Aug 2023 6:45 PM GMT (Updated: 22 Aug 2023 6:46 PM GMT)

மேலமங்கநல்லூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது

மயிலாடுதுறை

குத்தாலம்:

குத்தாலம் தாலுகா மேலமங்கநல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 31-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தீமிதி உற்சவம் தொடங்கியது. தொடர்ந்து சுவாமி வீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி உற்சவம் நேற்று வெகு விமர்சையாக நடந்தது. இதையடுத்து காவிரி கரையில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் மேள வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் இறங்கி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். மேலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


Next Story