திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா


திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
x

திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

அரியலூர்

தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி கடந்த 5-ந் தேதி திருவிழாவுக்கான காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தினமும் வீதி உலா காட்சி கிராமத்தின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது. தொடர்ந்து தினமும் மகாபாரதம் பாராயணம் செய்யப்பட்டது. இதன் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கி தீ மிதிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முதலில் பூங்கரகம், அக்கினி கரகம் குண்டம் இறங்கிய பின்பு மற்ற பக்தர்கள் தீ மிதித்தனர். திருவிழாவில் 100-க்கும் அதிகமான பக்தர்கள் குண்டம் இறங்கி தீமிதித்தனர். சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதி திருவிழாவை கண்டு சரண கோஷங்களை எழுப்பினர். தா.பழூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


Next Story