திம்பம் மலைப்பாதையில்லாரி கவிழ்ந்தது; போக்குவரத்து பாதிப்பு


திம்பம் மலைப்பாதையில்லாரி கவிழ்ந்தது; போக்குவரத்து பாதிப்பு
x

திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு

தாளவாடி

திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திம்பம் மலைப்பாதை

சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதை தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக மாநிலம் செல்லும் முக்கிய பாதையாக உள்ளது. அதனால் எப்போதும் பஸ், லாரி, கார், வேன், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. சாதாரணமாக வரும் லாரிகள் கொண்டை ஊசி வளைவுகளில் திரும்பி விடுகின்றன. ஆனால் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் வளைவுகளில் திரும்ப முடியாமல் பழுதாகி நிற்பதும், விபத்துக்குள்ளாவதும், அதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

லாரி கவிழ்ந்தது

இந்தநிலையில் கேரளாவில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு சாக்குப்பைகள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது. நேற்று காலை 11 மணி அளவில் திம்பம் மலைப்பாதையின் 20-வது கொண்டை ஊசி வளைவை கடந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி ரோட்டில் கவிழ்ந்தது.

இதனால் பெரிய வாகனங்கள் செல்ல முடியவில்லை. சிறிய வாகனங்கள் மட்டும் சென்று வந்தன. மலைப்பாதையின் இருபுறமும் கனரக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதன்பின்னர் பண்ணாரியில் இருந்து மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, லாரி தூக்கி நிறுத்தப்பட்டது. அதன்பிறகே போக்குவரத்து சீரானது. லாரி கவிழ்ந்ததால் திம்பம் மலைப்பாதையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story