மாவட்ட மைய நூலகத்தில் சிந்தனை முற்றம் நிகழ்ச்சி


மாவட்ட மைய நூலகத்தில் சிந்தனை முற்றம் நிகழ்ச்சி
x

மாவட்ட மைய நூலகத்தில் சிந்தனை முற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்ட மைய நூலகத்தில் பொது நூலகத்துறை மாவட்ட மைய நூலகம் வாசகர் வட்டம் சார்பில் சிந்தனை முற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. வாசகர் வட்ட தலைவர் சங்கர் வரவேற்று பேசினார். மாவட்ட நூலக அலுவலர் (பொறுப்பு) சிவகுமார் முன்னிலை வகித்தார். பொது நூலக இயக்கம் இணை இயக்குனர் அமுதவல்லி கலந்து கொண்டு, நூலக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கி பேசினார். மேலும் காலத்தின் கேள்விகள் என்ற தலைப்பில் எழுத்தாளர் ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். முடிவில் மாவட்ட மைய நூலகர் மேரி ரோசரிசாந்தி நன்றி கூறினார்.


Next Story