திருச்செங்கோட்டில் ரூ.10 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்


திருச்செங்கோட்டில்  ரூ.10 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 1 Dec 2022 6:45 PM GMT (Updated: 1 Dec 2022 6:46 PM GMT)
நாமக்கல்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா? என்று நகராட்சி சுகாதார அலுவலர் வெங்கடாசலம், சுகாதார ஆய்வாளர் குமரவேல் மற்றும் பணியாளர்கள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது சில கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. விற்பனை செய்த கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் 4 கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் வணிகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு தொடரப்படும் என்று நகராட்சி ஆணையாளர் கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story