நவராத்திரியையொட்டி திருக்கல்யாண விழா


நவராத்திரியையொட்டி திருக்கல்யாண விழா
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நவராத்திரியையொட்டி திருக்கல்யாண விழா

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமம் சவுடாம்பிகை அம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது ஆகும். இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி விழாவையொட்டி கத்திபோடும் விழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டும் கடந்த மாதம் 26-ந் தேதி காலையில் கணபதி ஹோமத்துடன் நவராத்திரி விழா தொடங்கியது. இரவு அலகு சேர்வை செய்து, சக்தி அழைத்து கொலு ஆரம்பிக்கப்பட்டது. 30-ந் தேதி மாலையில் பெண்கள் திருவிளக்கு வழிபாடு செய்தனர். 4-ந் தேதி இரவு 8 மணிக்கு சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நடைபெற்றது. 5-ந் தேதி காலை 9 மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று அலகு சேர்வை செய்து(கத்தி போடுதல்) சக்தி அழைத்து, முளைப்பாரி எடுத்து வரப்பட்டது. கத்தி போடும் நிகழ்ச்சியில் சிறியவர் முதல் பெரியவர் வரை 12 நாட்கள் விரதம் இருந்து தனது உடலை வருத்தி கத்திபோட்டு வந்தனர். இது பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. மதியம் 1 மணிக்கு மாவிளக்கு பூஜை, ராகுதீப பூஜை, இரவு 9 மணிக்கு அம்பு சேர்வை, அம்மன் திருவீதி உலா, அலங்கார வாணவேடிக்கை, அபிஷேக பூஜை, கொலு நிறைவு செய்தல் ஆகியன நடைபெற்றது. நேற்று காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜை செய்து அம்மனுக்கு திருக்கல்யாண விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர்கள் செய்து இருந்தனர்.


Next Story