சித்தி-புத்தி தட்சிணாமூர்த்தி விநாயகர் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி


சித்தி-புத்தி தட்சிணாமூர்த்தி விநாயகர் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி
x

சித்தி-புத்தி தட்சிணாமூர்த்தி விநாயகர் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது

தஞ்சாவூர்

பாபநாசம் தாலுகாவிற்கு உட்பட்ட மெலட்டூரில் எழுந்தருளியிருக்கும் சித்தி-புத்தி தட்சிணாமூர்த்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 நாள் பிரமோற்சவம் கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. அதனைத்தொடர்ந்து வெள்ளி பல்லக்கு மற்றும் ஓலை சப்பரத்தில் சாமி வீதியுலா நடந்தது. இங்குள்ள சித்தி-புத்தி தட்சிணாமூர்த்தி விநாயகருக்கு நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சி சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நிகழ்ச்சியில் திருமணமாகாத பெண்கள் கலந்து கொண்டால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். அந்தவகையில் பிரமோற்சவத்தின் 7-ம் நாள் நிகழ்ச்சியாக சாமி தட்சிணாமூர்த்திக்கு சித்தி-புத்தியுடன் நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி பக்தர்கள் சீர்வரிசை பொருட்களை எடுத்து வந்தனர். அதனைத்தொடர்ந்து அக்னி ஹோமம் நடத்தப்பட்டு ஆகம விதிமுறைகளின்படி சுவாமிக்கு அம்பாள் சித்தி- புத்தியுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், உள்ளூர் மற்றும் வெளி ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி எஸ்.குமார் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.





1 More update

Next Story