கரட்டுமேடு முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்


கரட்டுமேடு முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
x

சரவணம்பட்டி அருகே உள்ள கரட்டுமேடு முருகன் கோவிலில் பேரூர், சிரவை ஆதினங்கள் தலைமையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

கோயம்புத்தூர்

சரவணம்பட்டி

சரவணம்பட்டி அருகே உள்ள கரட்டுமேடு முருகன் கோவிலில் பேரூர், சிரவை ஆதினங்கள் தலைமையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

கரட்டுமேடு முருகன் கோவில்

கோவை சரவணம்பட்டியை அடுத்த கரட்டுமேடு பகுதியில் பழமை வாய்ந்த முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் முருகன், வள்ளி-தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 20-ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. திருக்கல்யாண விழா மாலை 4.30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, கணபதி வேள்வி பூஜையுடன் தொடங்கியது.

தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. 5 மணிக்கு துர்க்கை அம்மன், செல்வ விநாயகர், வன்னீஸ்வரர் சன்னதிகளில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

திருக்கல்யாண உற்சவம்

அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க 108 சீர்வரிசை கொண்டு வரப்பட்டது. 6.30 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் தலைமையில் திருக்கல்யாண உற்சவம் மற்றும் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இரவு 9 மணிக்கு உற்சவர் பள்ளியறைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பரிபாலன சபை, அறங்காவலர்கள், திருக்கோயில் செயல் அலுவலர், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story