நீலிவனேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
நீலிவனேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைறெ்றது.
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் காலையில் பல்லக்கிலும், இரவில் சிம்மம், கிளி, யாளி, அன்னம், பூதம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தேர்திருவிழாவின் 5-ம் நாளான நேற்று முன்தினம் இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. நேற்று சாமி- அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி, வசந்த மண்டப விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் பட்டு வேட்டி, பட்டு சேலை, பழவகைகள், மலர் மாலைகள் பூக்கள் உள்ளிட்ட 30 வகையான சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக எடுத்து கோவிலுக்குள் வந்தனர்.அதைத்தொடர்ந்து கோவில் கொடிமரம் முன்பு சாமி-அம்பாள் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. பின்னர் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சாமி- அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (புதன்கிழமை) நடைபெறுகிறது.