அமுதலிங்கேஸ்பரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்


அமுதலிங்கேஸ்பரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
x

அமுதலிங்கேஸ்பரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அமுதவல்லி அம்மன் அமுதலிங்கேஸ்பரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பட்டாடை அணிந்து, வண்ண மலர்கள், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு அமுதவல்லியம்மன் கோவில் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து மணமேடைக்கு முன்பு பழங்கள், பட்டுச்சேலை, பட்டுவேட்டி, திருமாங்கல்யம், வண்ணமலர்கள், இனிப்புகள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. பின்னர் மாங்கல்ய பூஜையை தொடர்ந்து அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணம் நடைபெற்றது. அதன்பின்னர் அமுதலிங்கேஸ்பரர் - அமுதவல்லி அம்மன் திருமணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் திருமண விருந்து அளிக்கப்பட்டது.


Next Story