ரிஷிவந்தியம்அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்இன்று தேரோட்டம் நடக்கிறது
ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.
கள்ளக்குறிச்சி
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியத்தில் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 23-ந்தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து, தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் 7-வது நாள் உற்சவமான நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் உற்சவர் முத்தாம்பிகை, அர்த்தநாரீஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடந்து, விநாயகர், முருகன், தட்சணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், அம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற்றது.குருக்கள் நாகராஜ், சோமு ஆகிய சுவாமிகள் திருக்கல்யாண பூஜைகளை செய்திருந்தனர். விழாவில் இன்று (சனிக்கிழைமை) மதியம் 3.30 மணிக்கு தேரோட்டம் நடைபெற இருக்கிறது.
Related Tags :
Next Story