லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்


லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 25 Jan 2023 12:15 AM IST (Updated: 25 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை சித்தர்காடு லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை சித்தர்காட்டில் பிரசித்திப்பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 17- ம் ஆண்டு திருக்கல்யாண விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி ரெயிலடி சக்தி மாரியம்மன் கோவிலில் இருந்து ஏராளமான பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். தொடர்ந்து கோவிலில் கோ பூஜை நடந்தது. பின்னர் கோவிலின் பிரகாரத்தில் ஸ்ரீதேவி பூமாதேவி உடனாகிய லட்சுமி நாராயண பெருமாள் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். இதனைத்தொடர்ந்து சிறப்பு ஹோமம், மாலை மாற்றுதல் உற்சவம், கன்னிகாதானம் செய்யப்பட்டு பெருமாள் மற்றும் தாயாருக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story