பிரளயகாலேசுவரர் கோவிலில் திருக்கல்யாணம்
பெண்ணாடம் பிரளயகாலேசுவரர் கோவிலில் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
பெண்ணாடம்
பெண்ணாடத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆமோதனாம்பாள் உடனுறை அருள்மிகு பிரளயகாலேசுவரர் கோவிலில் ஆடி பூரத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதையொட்டி, சாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பினனர், 5 வகையான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களுடன் யாகங்கள் வளர்த்து, திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.
பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், அழகிய காதலியம்மன், பி்ரளயகாலேசுவரர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் அலங்கார மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
இதை தொடர்ந்து, பிரளயகாலேசுவரர் ஆமோதனாஅம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. சிவச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடந்தது, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக ஆடிப்பூரம் என்பதால், அம்மனுக்கு வளையல்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. விழாவில் பங்கேற்ற பெண் பக்தர்களுக்கு வளையல்கள் வழங்கப்பட்டது.