துறையூர் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் திருக்கல்யாணம்
துறையூர் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
துறையூரில் தென்திருப்பதி என்றழைக்கப்படும் பெருமாள்மலையில் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.. இதனையொட்டி உற்சவ பெருமாள் உபயநாச்சியார்களுடன் சமேதராக அதிகாலை 4 மணிக்கு பெருமாள்மலை தலத்திலிருந்து புறப்பட்டு அடிவாரத்திலுள்ள அனுமன் கோவிலுக்கு 4.30 மணிக்கு எழுந்தருளினார். அங்கிருந்து காலை 7 மணிக்கு வெல்வெட் பல்லக்கில் புறப்பட்டு துறையூர் பெரம்பலூர் சாலை, கடைவீதி வழியாக துறையூரில் உள்ள வேணுகோபால் கோவிலை வந்தடைந்தார். தொடர்ந்து பெருமாள்-தாயாருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும், திருமஞ்சனமும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
இரவு பிரசன்ன வெங்கடாஜலபதி மின் விளக்கு மற்றும் மலர்களால் அலக்கரிக்கப்பட்ட பல்லக்கில் தேரோடும் வீதியில் வலம் வந்தார். இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.