திருக்கார்த்திகை: பனை ஓலை விற்பனை மும்முரம்...!


திருக்கார்த்திகை: பனை ஓலை விற்பனை மும்முரம்...!
x

திருக்கார்த்திகை விழா நாளை கொண்டாடப்படுகிறது. ஓலை கொழுக்கட்டை செய்ய பனங்குருத்து ஓலைகளை ஆர்வமுடன் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.

தூத்துக்குடி,

கார்த்திகை மாதம் முழுவதும் வீடுகளில் விளக்கேற்றும் முறை நமது தமிழகத்தில் இருந்து வருகின்றது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் திருக்கார்த்திகை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் இரவில், வீடுகள்தோறும் அகல் விளக்கு தீபம் ஏற்றுவதும், கொழுக்கட்டை தயார் செய்து படைத்து வழிபடுவதும் வழக்கம் ஆகும். இந்த ஆண்டுக்கான திருக்கார்த்திகை விழா நாளை கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி தீபத்துக்கான அகல்விளக்குகளை மக்கள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். இதேபோன்று, தூத்துக்குடி மார்க்கெட் அருகே பனங்குருத்து ஓலை விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.


Next Story