திருக்குறள் பேரவை கூட்டம்
மயிலாடுதுறையில் திருக்குறள் பேரவை கூட்டம் நடந்தது
மயிலாடுதுறை நாராயசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் திருக்குறள் பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பேரவைத் தலைவர் சிவசங்கரன் தலைமை தாங்கினார். பேரவை இணை செயலாளர் இமயவரம்பன் வரவேற்றார். இதில், வள்ளுவர் பெரிதும் வலியுறுத்துவது ஆள்வினையையா? ஊழ்வினையையா? என்னும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் சந்தான லட்சுமி, கார்த்திகேயன் , ஞானசேகரன், ஈஸ்வரி ஆகியோர் உரையாற்றினர். முன்னதாக பசுமை முதன்மையாளர் விருது பெற்ற பேரவை செயலாளர் செல்வகுமாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில், தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி செயலர் செல்வநாயகம், தேசிய நல்லாசிரியர் முருகையன், நல்லாசிரியர் திருவள்ளுவன், மயிலாடுதுறை தமிழ் சங்கத்தின் நிறுவனர் பவுல்ராஜ், டாக்டர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர். நிகழ்ச்சிகளை நல்லாசிரியர் மதிவாணன் தொகுத்து வழங்கினார். முடிவில் பேரவை பொருளாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.