திருக்குவளை தியாகராஜர் கோவில் குடமுழுக்கு


திருக்குவளை தியாகராஜர் கோவில் குடமுழுக்கு
x

திருக்குவளை தியாகராஜர் கோவில் குடமுழுக்கு

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் திருக்குவளையில் தியாகராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 24 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடந்தது. விழாவையொட்டி கடந்த 8-ந்தேதி முதல் அனுக்ஞை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் நடைபெற்றது. 10-ந்தேதி 2-ம் கால யாகசாலை பூஜை, 6-ம் கால யாகசாலை பூஜை ஆகியவை நடந்தது. விழாவில் நேற்று கடங்கள் புறப்பட்டு கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரம்மச்சாரிய சுவாமிகள், கலெக்டர் அருண்தம்புராஜ், ஐகோர்ட்டு நீதிபதிகள் மகாதேவன், ஜெயச்சந்திரன், ஆதிகேசவலு, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், நாகப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிச்செல்வன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதேபோல் வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் செட்டியார் குத்தகை பகுதியில் உள்ள முத்தையா விநாயகர் கோவில் குடமுழுக்கு நடந்தது. இதையொட்டி நேற்று 4-ம் கால யாகசாைல பூஜைகள் நடந்தன. பின்னர் கடங்கள் புறப்பட்டு கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


Next Story