விழுப்புரம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக திருமால் பொறுப்பேற்பு


விழுப்புரம் மாவட்ட    கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக திருமால் பொறுப்பேற்பு
x

விழுப்புரம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக திருமால் பொறுப்பேற்றுக்கொண்டார்.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்ட காவல்துறை தலைமையிட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த நீதிராஜ் பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக கோவிந்தராஜ் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த திருமால் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று விழுப்புரம் மாவட்ட காவல்துறை தலைமையிட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.

இவர் நேற்று விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தலைமையிட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு போலீஸ் சூப்பிரண்டு அலுவலக அதிகாரிகள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இவர் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். புதியதாக பொறுப்பேற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமால் இதற்கு முன்பு விழுப்புரம், திண்டிவனத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story