திருமலைநாயக்கர் பிறந்தநாள் விழா
திண்டுக்கல்லில் திருமலைநாயக்கர் பிறந்த நாள் விழா நடந்தது.
திண்டுக்கல்
தமிழ்நாடு நாயுடு-நாயக்கர் உறவின்முறை சார்பில், மன்னர் திருமலைநாயக்கர் பிறந்தநாள் விழா திண்டுக்கல் ரவுண்டுரோடு நாயுடு மகாலில் நடந்தது. விழாவுக்கு திண்டுக்கல் மாவட்ட தலைவர் அழகுராஜா தலைமை தாங்கினார். இதில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி கலந்துகொண்டு திருமலைநாயக்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் ஆனந்த், கவுன்சிலர் இந்திராணி, அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் வினோத்குமார், தமிழ்நாடு நாயுடு-நாயக்கர் உறவின்முறை மாநில இளைஞரணி தலைவர் லோகேந்திரன், மாவட்ட செயலாளர் ஜனார்த்தன், துணைச்செயலாளர் இளங்கோ, இளைஞரணி தலைவர் பாலா, நிர்வாகி சபாஷ்நாயுடு, இந்து முண்ணனி மாவட்ட செயலாளர் சஞ்சீவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story