திருச்செந்தூரில் திருமாவளவன் பிறந்தநாள் விழா


திருச்செந்தூரில்  திருமாவளவன் பிறந்தநாள் விழா
x

திருச்செந்தூரில் திருமாவளவன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்செந்தூரில் கட்சியின் நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் கலைவேந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் பிறந்த 3 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார். மேலும் அனைத்து உள்நோயாளிகளுக்கும் பிரட், பழம் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வக்கீல் ராஜ்குமார், சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்ப்பரிதி, செய்தி தொடர்பு மையம் மாவட்ட அமைப்பாளர் வேம்படிமுத்து, உடன்குடி ஒன்றிய பொருளாளர் ஜான் வளவன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட துணை அமைப்பாளர் சரவணன், முற்போக்கு மாணவர் கழக மாவட்ட துணை அமைப்பாளர் பாபாசாகிப் அருண், திருச்செந்தூர் நகர பொருளாளர் சரண்ராஜ், ஆறுமுகநேரி நகர துணை செயலாளர் அரிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story