திருமையாசாமி கோவில் குடமுழுக்கு
அதிராம்பட்டினம் திருமையாசாமி கோவில் குடமுழுக்கு நடந்தது.
தஞ்சாவூர்
அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட சுப்பிரமணியர் கோவில் தெரு பகுதியில் உள்ள திருமையா சாமி கோவிலில் குடமுழுக்கு நடந்தது. இதை முன்னிட்டு யாக சாலை பூஜைகள், விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, தன பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து கடங்கள் புறப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓதி புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. பின்னர் திருமையாசாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story