திருமுருகன் காந்தி திடீர் கைது!

சென்னையில் போலீசாரின் தடையை மீறி, மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை கைது செய்த போலீசார்.
சென்னை
சென்னை,
சென்னையில் போலீசாரின் அனுமதி இன்றி, மே-17 இயக்கத்தினர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினர். இதனையடுத்து, மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 300 பேர் மீது சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து, மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விசிக-வின் வன்னியரசு, ஆம் ஆத்மி கட்சியின் வசீகரன் மற்றும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கைது செய்யப்பட்டு சமுதாய கூடத்தில் அடைக்கப்பட்ட நிலையில், பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமுருகன் காந்தி, மிகவும் அமைதியாக நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தடுக்க எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது என தெரிவித்துளளார்.
Related Tags :
Next Story






