3-வது நாளாக திருத்துறைப்பூண்டி ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்


3-வது நாளாக திருத்துறைப்பூண்டி ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x

3-வது நாளாக திருத்துறைப்பூண்டி ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி

3 மாத சம்பளம் வழங்கக்கோரி நேற்று 3-வதுநாளாக திருத்துறைப்பூண்டி கல்லூரியில் ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவாக மாரிமுத்து எம்.எல்.ஏ. கலந்துகொண்டார்.

3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 3 மாதமாக சம்பளம் வழங்காத பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்தும், நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக்கோரியும் கடந்த 2 நாட்களாக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு ஆங்கில துறைத்தலைவர் யோகபிரகாசம் தலைமை தாங்கினார். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று3-வது நாளாக ஆசிரியர்கள், ஊழியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாரிமுத்து எம்.எல்.ஏ. ஆதரவு

இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்து மாரிமுத்து எம்.எல்.ஏ. கலந்துகொண்டார். இந்த கல்லூரியில் பணி புரிந்துவரும் விரிவுரையாளர்களுக்கு மூன்று மாத ஊதியம் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இதில் செயலாளர் தனிகைராஜன், பொருளாளர் நந்தினி, துணைத்தலைவர் ஓம்பிரகாஷ், துணை செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 30 விரிவுரையாளர்கள் மற்றும் 4 அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


Next Story