திருத்துவபுரம் மூவொரு இறைவன் பேராலய திருவிழா கொடியேற்றம்
கன்னியாகுமரி திருத்துவபுரம் மூவொரு இறைவன் பேராலய திருவிழா கொடியேற்றம் சிறப்பாக நடைப்பெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம்,குழித்துறை மறைமாவட்ட தலைமைப் பேராலயமாக திருத்துவபுரம் மூவொரு இறைவன் பேராலயம் உள்ளது. இந்த பேராலய திருவிழா நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றினார். கொடியேற்ற நிகழ்ச்சியில் பேராலய பங்குத்தந்தை பீட்டர் மற்றும் அருட்பணியாளர்கள், பங்குமக்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட செயலாளர் அருட்பணியாளர் ரசல்ராஜ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் திருப்பலி நடக்கிறது. வருகிற 11-ந் தேதி காலையில் முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறும்.
மாலையில் மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமையில் மாலை ஆராதனையும் தொடர்ந்து தேர்ப்பவனியும் நடைபெறும்.
விழாவின் இறுதி நாளான 12-ந் தேதி காலை 9 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து அன்பின் விருந்தும், மாலையில் நற்கருணை ஆசீர், மறைக்கல்வி மன்ற பொதுக்கூட்டம், பரிசு வழங்குதல் போன்றவையும் நடக்கிறது.