திருவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


திருவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x

திருவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் தை மாத தெப்பத்திருவிழா நடைபெற்றது.

திருவைகுண்டம்,

தூத்துக்குடி மாவட்டத்தின் நவதிருப்பதி பெருமாள் கோவில்களில் முதல் கோவிலான கள்ளபிரான் சுவாமி கோவில் திருவைகுண்டத்தில் உள்ளது. இக்கோவிலின் தை மாத தெப்பத்திருவிழா இன்று இரவு 7 மணி நடைபெற்றது.

அப்போது ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி, நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளியங்குடி காய்சினிவேந்தப்பெருமாள் ஆகிய உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி தெப்பத்தில் 5 முறை வலம் வந்தனர். இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர்.

இதை தொடர்ந்து நாளை (செவ்வாய்கிழமை) இரவு 7 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி மட்டும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து உள்ளனர்.


Next Story