லண்டன் பெண்ணை திருமணம் செய்த திருவையாறு என்ஜினீயர்


லண்டன் பெண்ணை திருமணம் செய்த திருவையாறு என்ஜினீயர்
x

லண்டன் பெண்ணை காதலித்து திருவையாறு என்ஜினீயர் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் இந்துமுறைப்படி நடந்தது.

தஞ்சாவூர்

லண்டன் பெண்ணை காதலித்து திருவையாறு என்ஜினீயர் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் இந்துமுறைப்படி நடந்தது.

லண்டன் பெண்

தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி ஜமுனா. இவர்களின் மகன் கார்த்திக் பெரியசாமி (வயது 33). என்ஜினீயர் ஆன இவர் லண்டனில் உள்ள ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.

அதே நிறுவனத்தில் பணிபுரியும் லண்டனை சேர்ந்த ஆலிஸ் பால்க் (28) என்பவருடன் கார்த்திக் பெரியசாமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

திருமணம் செய்ய முடிவு

இருவரும் தங்கள் காதலை பெற்றோரிடம் தெரிவித்தனர். இதற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இதையடுத்து லண்டனில் இருந்து மணமகள் குடும்பத்தினர் ேநற்று தஞ்சை மாவட்டம் திருவையாறுக்கு வந்தனர். பின்னர் திருவையாறில் ஒரு திருமண மண்டபத்திற்கு லண்டன் மணப்பெண் பட்டுப்புடவையில் மண மேடைக்கு வந்தார். அப்போது மணப்பெண்ணின் தாய், தந்தை, சகோதரர் தமிழ் பாரம்பரிய உடை அணிந்து மேடையில் நின்றனர்.

தாலி கட்டினார்

பின்னர் இந்து முறைப்படி புரோகிதர் மந்திரம் சொல்லி மாங்கல்யத்தை எடுத்து கொடுக்க மணமகன் கார்த்திக் பெரியசாமி, ஆலிஸ் பால்க் கழுத்தில் தாலி கட்டினார். அப்போது மணமக்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மணமக்களுக்கு அட்சதை தூவி ஆசிர்வதித்தனர்.


Next Story