கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைத்த திருவள்ளுர் கலெக்டர்
கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் குறித்து விழிப்புணர்வு பேரணியை திருவள்ளுர் கலெக்டர் தொடங்கிவைத்தார்.
திருவள்ளூர்
திருவள்ளுர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியில் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நரசிம்மராவ், முன்னாள் இந்திய கால்பந்தாட்ட வீரர் ராமன் விஜயன், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story