லஞ்ச வழக்கில் ஓய்வு பெற்ற பெண் வட்டாட்சியருக்கு 3 ஆண்டுகள் சிறை - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு


லஞ்ச வழக்கில் ஓய்வு பெற்ற பெண் வட்டாட்சியருக்கு 3 ஆண்டுகள் சிறை - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு
x

ஓய்வு பெற்ற பெண் வட்டாட்சியருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த துளசிராமன் என்பவர் தான் வாங்கிய புதிய மினி பேருந்துக்கு சொத்து மதிப்பு சான்று கோரி கடந்த 2013-ம் ஆண்டு விண்ணப்பித்தார். அப்போது வட்டாட்சியராக பணியாற்றிய திலகம் என்பவர் சான்றிதழ் வழங்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கு திருவள்ளூர் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, ஓய்வு பெற்ற வட்டாட்சியர் திலகத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 40 ஆயிரம் ருபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.



Next Story