கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு


கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
x

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர்

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த மணவாளநகரில் தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை 37-வது மெகா கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மணவாளநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்த தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவகர்லால், வட்டார மருத்துவ அலுவலர் காந்திமதி, கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம், சந்திரசேகர் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story