திருவள்ளூர் மருத்துவக்கல்லூரி புதிய டீன் பதவி ஏற்பு


திருவள்ளூர் மருத்துவக்கல்லூரி புதிய டீன் பதவி ஏற்பு
x

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியின் புதிய முதல்வராக ஜெ.ரேவதி பதவி ஏற்றுக்கொண்டார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் முதல்வராக இருந்த அரசி சென்னைக்கு மாற்றப்பட்ட நிலையில் சில மாதங்களாக முதல்வர் (டீன்) பதவி காலியாக இருந்து வந்தது. துணை முதல்வர் திலகவதி கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மயக்கவியல் துறை தலைவராக பணியாற்றி வந்த டாக்டர். ஜெ.ரேவதி பதவி உயர்வு பெற்று திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியின் புதிய முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.

அதை தொடர்ந்து முதல்வர் ரேவதி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீசை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் திலகவதி, ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் புதிய முதல்வர் ரேவதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story