புது பொலிவுடன் திருவள்ளுவர் சிலை - பார்வையிட குவிந்த சுற்றுலா பயணிகள்


புது பொலிவுடன் திருவள்ளுவர் சிலை - பார்வையிட குவிந்த சுற்றுலா பயணிகள்
x

கன்னியாகுமரி, திருவள்ளுவர் சிலையின் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து மீண்டும் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி,

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை உப்பு காற்றில் இருந்து சேதமடைவதை தடுக்க 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயன கலவை பூசும் பணி நடப்பது வழக்கம்.

அதன்படி ரூ.1 கோடி செலவில் சிலை பராமரிப்பு பணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6-ம் தேதி துவங்கியது. சிலையை சுத்தம் செய்து கலவை பூசும் பணி நடந்தது. பின்னர் வாக்கர் எனப்படும் ரசாயன கலவை பூசப்பட்டது.

இப்பணி தற்போது நிறைவடைந்ததை தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் பார்வையிட மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட கன்னியாகுமரியில் சுற்றுலாப்பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

1 More update

Next Story