திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் தெப்ப உற்சவம்


திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் தெப்ப உற்சவம்
x

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் தைத்தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது.

திருச்சி

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் தைத்தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது.

தெப்ப திருவிழா

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் தை தெப்ப திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தெப்பத்திருவிழாவின் 10-ம் நாளான நேற்று முன்தினம் காலை நடராஜர் ஊடல் நிகழ்ச்சியும், மாலை ஜம்புகேஸ்வரர் யாழி வாகனத்தில், அம்மன் புலி வாகனத்தில் எழுந்தருளி 4-ம் பிரகாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

முக்கிய நிகழ்ச்சியான தைத்தெப்ப உற்சவம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் சன்னதியிலிருந்து மாலை 5 மணிக்கு உற்சவர் ஜம்புகேஸ்வரர், பிரியாவிடை அம்மன், அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆகியோர் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி திருவானைக்காவல் டிரங்க் ரோடு அருகே உள்ள ராமதீர்த்த குளத்திற்கு வந்தடைந்தனர். அங்கு தெப்பத்தில் ஜம்புகேஸ்வரர், பிரியாவிடை அம்மன், அகிலாண்டேஸ்வரி அம்மன் எழுந்தருளி 3 முறை சுற்றி வந்து மாலை 6.30 மணியளவில் தெப்ப உற்சவம் கண்டருளுளினர்.

ரிஷப வாகனம்

பின்னர் சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. அங்கிருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளியவாறு 4-ம் பிரகாரத்தில் வீதி உலா வந்து கோவிலை சென்றடைந்தனர். தைத்தெப்ப உற்சவத்தின் நிறைவு நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி ஆகியோர் வீதியுலா வருகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story