"திருவண்ணாமலை மாவட்டத்தை 2 மாவட்டமாக பிரிக்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்
திருவண்ணாமலை மாவட்டத்தை 2 மாவட்டமாக பிரிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கக் கோரி அண்ணா சிலை முன்பு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
தமிழ்நாட்டிலேயே நிலப்பரப்பில் 2-வது பெரிய மாவட்டமாக திருவண்ணாமலை உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 27 லட்சம் மக்கள் உள்ளனர். இந்த மாவட்டத்தில் 8 சட்டபேரவை தொகுதிகள் உள்ளன; இதை 4 தொகுதிகள் வீதம், 2 மாவட்டமாக பிரிக்க வேண்டும்.
வேலூர் மாவட்டத்தைக் விட திருவண்ணாமலை மாவட்டம் பெரியது. சிப்காட் உள்ளிட்ட எந்த வசதிகளும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியும் திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்படாமல் உள்ளது.
பரப்பளவு, மக்கள் தொகையில் பெரிதாக உள்ள திருவண்ணாமலையை பிரிக்காதது ஏன்?. அதைபோல சேலம், கோவை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களையும் பிரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.