திருவாரூர் பெட்ரோல் பங்கில் மோசடி - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

திருவாரூர் பெட்ரோல் பங்கில் மோசடி - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
x

திருவாரூரில், பெட்ரோல் பங்கில், அளவு குறைவாக பெட்ரோல் வழங்கப்பட்டதால், அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

திருவாரூர்,

திருவாரூரில், பெட்ரோல் பங்கில், அளவு குறைவாக பெட்ரோல் வழங்கப்பட்டதால், அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட திருவாரூர்-நாகை பைபாஸ் சாலையில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பங்கில் பெட்ரோல் நிரப்பச் சென்ற வாடிக்கையாளர் சூர்ய தேவன் என்பவர், வாங்கிய அரை லிட்டர் பெட்ரோலில் 50 மில்லி லிட்டர் குறைவாக இருந்துள்ளது.

இதை உறுதி செய்யும் விதமாக, 5 லிட்டர் அளவு கொண்ட கேனில் பெட்ரோல் வாங்கியபோது, அதில் 200 மில்லி லிட்டர் குறைவாக இருந்துள்ளது. இதுகுறித்த தகவலின் பேரில் வந்த போலீசார் மற்றும் வட்டாட்சியர், விசாரணை நடத்தினர்.

அதில், பெட்ரோல் அளவு குறைவாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெட்ரோல் பங்கின் உரிமையாளர் விநாயக மூர்த்தியிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story