கண்டதேவி சொர்ணமூர்த்தீசுவரர் கோவில் ஆனி திருவிழா


கண்டதேவி சொர்ணமூர்த்தீசுவரர் கோவில் ஆனி திருவிழா
x

தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்தீசுவரர் கோவில் ஆனித்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சிவகங்கை

தேவகோட்டை,

தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்தீசுவரர் கோவில் ஆனித்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கண்டதேவி திருவிழா

தேவகோட்டை அருகே உள்ளது கண்டதேவி இங்கு சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற சொர்ணமூர்த்தீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனிதிருவிழா 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறுவது வழக்கம்.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த விழா நடைபெறவில்லை. இந்தநிலையில் இந்த ஆண்டிற்கான இந்த விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 9 மணிக்குமேல் கோவில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கொடியேற்றப்படுறது. அதன்பின்னர் மாலை காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவையொட்டி தினந்தோறும் காலை, இரவு சாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

திருக்கல்யாணம்

விழாவின் 5-ம் திருநாள் அன்று சாமி, அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவ விழா நடக்கிறது. 9-ம் திருநாள் தேரோட்டம் நடக்கிறது. ஏற்கனவே தேர் பழுது காரணமாக கடந்த பல ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெற வில்லை. இந்த ஆண்டு தேரோட்டம் நடக்குமா என எதிர்பார்க்கும் பட்சத்தில் அனுமதி கிடைக்காவிட்டால் சிறிய சப்பரத்தில் சாமி மற்றும் அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறப்படுகிறது.


Next Story