பறவை காவடி எடுத்து இலங்கை தமிழர்கள் வழிபாடு


பறவை காவடி எடுத்து இலங்கை தமிழர்கள் வழிபாடு
x

திருப்பரங்குன்றம் அருகே இலங்கை தமிழர்கள் உலக நலன் வேண்டி பறவை காவடி, பால்குடம் எடுத்து விநாயகருக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் நடத்தி வழிபட்டனர்.

மதுரை

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் அருகே இலங்கை தமிழர்கள் உலக நலன் வேண்டி பறவை காவடி, பால்குடம் எடுத்து விநாயகருக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் நடத்தி வழிபட்டனர்.

உலகநலனுக்காக

திருப்பரங்குன்றத்தை அடுத்த உச்ச பட்டியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் சித்தி விநாயகர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு விநாயகர் சதூர்த்திவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது.

அதேபோல இந்த ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விசேஷமாக நடைபெற்றது. விழாவையொட்டி வழக்கம்போல முகாமில் இருந்து திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கைக்கு புறப்பட்டு வந்தனர். பின்னர் அவர்கள் பொய்கையின் நீரில் புனித நீராடினர். பின்னர் கரையில் உள்ள விநாயகரையும், ஆறுமுகப் பெருமானையும் பூஜை செய்து வழிபட்டனர். இதையடுத்து மேளதாளங்கள் முழங்க உலக நலன் வேண்டி பறவை காவடி, பால் காவடி, மயில் காவடி எடுத்து ஊர்வலமாக புறப்பட்டனர்.

பாலாபிஷேகம்

திருட்பரங்குன்றம், ஹார்விப்பட்டி திருநகர், தனக்கன்குளம் வழியாக உச்சப் பட்டி வரை குடும்பம் குடும்பமாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் பயபக்தியுடன் பாதயாத்திரையாக வந்தனர். உச்சப்பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் உலக நலன், அனைத்து தமிழர்களுக்கும் சுபிட்சமாக நலத்துடன் வாழவேண்டும் என்று வேண்டினார்கள். தொடர்ந்து விநாயகருக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.

1 More update

Related Tags :
Next Story