கோவிலில் திருவிளக்கு பூஜை


கோவிலில் திருவிளக்கு பூஜை
x

கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை மேலூர் முத்தழகி அம்மன் கோவிலில் வைத்து விவேகானந்தா கேந்திரம் மற்றும் மேலூர் தேவர் சமுதாயம் சார்பில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது. தொழிலதிபர் லிங்கராஜ் தலைமை தாங்கினார்.

விழா கமிட்டி நிர்வாகிகள் சரத்சந்திரன், நளினி உதயபானு, கதிரவன், லிங்கராஜ், ஆர்என்.குமார், சமுதாய தலைவா் முன்னாள் ராணுவ வீரர் ஜெயகணேஷ், செயலாளா் ஐயப்பன், பொருளாளா் பழனிக்குமார், பொறியாளா் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். பி.எல்.எம். ஸ்போர்ட்ஸ் கிளப் எல்எம்.முரளி அனைவரையும் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஐந்தருவி சுவாமி விவேகானந்தா ஆசிரமம் சுவாமி அகிலானந்த மகராஜ், சாரதா ஆசிரமம் அம்பாள் யத்திஸ்வரி ஆத்மபிரியா ஆகியோர் ஆசியுரை வழங்கினா்.


1 More update

Next Story