தீவனூர்லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருவோண தீபம் ஏற்றம்
தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருவோண தீபம் ஏற்றப்பட்டது.
திண்டிவனம்,
கற்கோவில்
திண்டிவனம் அருகே தீவனூர் கிராமத்தில் ஸ்ரீ ஆதிநாராயண பெருமாள் என்கிற ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த கற்கோவிலில் அமர்ந்து அருள்பாலித்து வரும் பெருமாளுக்கு மாதந்தோறும் திருவோண தீபம் ஏற்றப்பட்டு வருவது இக்கோவிலின் சிறப்பாக கருதப்படுகிறது. அதன்படி ஆவணி மாதத்திற்கான திருவோண தீபம் நேற்று முன்தினம் மாலை ஏற்றப்பட்டது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, லட்சுமி நாராயண பெருமாளுக்கு பல்வேறு வகையான அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பெருமாள் வெள்ளிகவசம் அணிந்து மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதன்பிறகு பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தீபம் ஏற்றப்பட்டது
இதையடுத்து மாலையில் அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்திகள் பவனியாக கோவில் முன்புள்ள 32 அடி உயரமுள்ள கல்ஸ்தூபியின் அருகே கொண்டு வரப்பட்டது. பின்னர் மாலை 6.30 மணிக்கு லட்சுமி நாராயண பெருமாள் முன்னிலையில் கல் ஸ்தூபியில் திருவோண தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு சுற்றியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கரகோஷம் எழுப்பினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகத்தா நாமக்காரர் முனுசாமி கவுண்டர் செய்திருந்தார்.