'ஜனநாயகத்திற்கு இது நல்லதல்ல' - ராகுல் காந்தி தகுதிநீக்கம் குறித்து குலாம்நபி ஆசாத் கருத்து


ஜனநாயகத்திற்கு இது நல்லதல்ல - ராகுல் காந்தி தகுதிநீக்கம் குறித்து குலாம்நபி ஆசாத் கருத்து
x

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரும் வரை தகுதிநீக்கம் என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கக் கூடாது என குலாம்நபி ஆசாத் கூறினார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு (வயது 52) குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து அவரது எம்.பி. பதவி அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் தலைவர் குலாம்நபி ஆசாத் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "ராகுல் காந்தி, லாலு பிரசாத் யாதவ் என யாராக ஆக இருந்தாலும், இத்தகைய நடவடிக்கையை நான் எதிர்க்கிறேன். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரும் வரை தகுதிநீக்கம் என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கக் கூடாது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story