"எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையை நிராகரித்த காரணம் இது தான்..?"- ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி


எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையை நிராகரித்த காரணம் இது தான்..?- ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி
x
தினத்தந்தி 27 Nov 2022 3:32 AM GMT (Updated: 27 Nov 2022 3:50 AM GMT)

ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி, ஏய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையை நிராகரித்ததற்கான காரணத்தை தெரிவித்து உள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி, ஏய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையை நிராகரித்ததற்கான காரணத்தை தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, மறைந்த ஜெயலலிதா அவர்களுக்கு முதலில் இதயத்தில் பிரச்சனை இருந்துள்ளது. அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை தேவைப்பட்டது. ஆஞ்சியோ சிகிச்சை வேண்டாம் என மூன்று மருத்துவர்கள் கூறியதாக அறிக்கை வெளியானது.

ஆனால், மருத்துவர்கள் ஏன் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கவில்லை என்பது என்னுடைய சந்தேகமாக இருந்தது. சிகிச்சை குறித்து மருத்துவர்கள் கூறியதும் முரணாக இருந்தது. இதனால், ஏய்ம்ஸ் அறிக்கை நிராகரிக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story