தியாகதுருகம் அருகே இளம்பெண் தற்கொலை


தியாகதுருகம் அருகே இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 24 Jun 2023 12:15 AM IST (Updated: 26 Jun 2023 1:53 PM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே இளம்பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே ஈய்யனூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிராஜ் (வயது 53). இவரது மகள் மகாலட்சுமி (21). இவருக்கு வயிற்றுவலி அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த மகாலட்சுமி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மகாலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மணிராஜ் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story