தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, திருவாரூர் கலெக்டர் ஆனார்


தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, திருவாரூர் கலெக்டர் ஆனார்
x
தினத்தந்தி 31 Jan 2023 12:15 AM IST (Updated: 31 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, திருவாரூர் கலெக்டர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி

நெல்லை, தென்காசி மாவட்ட கலெக்டர்கள் திடீரென மாற்றம் செய்யப்பட்டனர். புதிய கலெக்டராக நெல்லைக்கு கார்த்திகேயனும், தென்காசிக்கு ரவிச்சந்திரனும் நியமிக்கப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ திருவாரூர் கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

திடீர் மாற்றம்

தமிழ்நாட்டில் 30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை திடீரென இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, தொழில்துறை வழிகாட்டி, தொழில் துறை மேலாண்மை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் நெல்லை மாவட்ட புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்காசி கலெக்டர்

தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ், தொழிலாளர் நலத்துறை உதவி செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இவருக்கு பதிலாக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் செயலர் ரவிச்சந்திரன் தென்காசி புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ஜெயசீலன் விருதுநகர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சாரூஸ்ரீ கலெக்டரானார்

தமிழ்நாடு மருத்துவ சேவை கழக மேலாண்மை இயக்குனர் தீபக் ஜேக்கப், கிருஷ்ணகிரி கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாரூஸ்ரீ திருவாரூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேனி கலெக்டர் முரளிதரன், இந்து அறநிலையத்துறை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளராக சி.தினேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் இறையன்பு நேற்று பிறப்பித்துள்ளார்.

-------------------


Next Story